2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

11 முறை திருமணம், 28 முறை நிச்சயதார்த்தம்

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 12 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின்  Utah பகுதியை சேர்ந்த மொனெட் டயஸ்(Monette Dias) என்ற 53 வயதான பெண், இதுவரை 11 முறை திருமணமும்,  28 முறை திருமண நிச்சயதார்த்தமும் செய்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 தனது 15 ஆவது வயதில் தந்தையை இழந்த அவர் தனக்கு உறவு என்று யாரும் இல்லை என ஏங்கியதாகவும், இதனால்  கணவர் என்ற பந்தத்தை ஏற்படுத்தி கொள்ள முடிவெடுத்துள்ளார் எனவும் இதனையடுத்து அவருக்கு முதல் திருமணம் இடம்பெற்றுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனினும் அவருக்கு திருமணம் என்பது  குறைந்தபட்சம் 4 மாதங்களும், அதிகபட்சம் 10 ஆண்டுகளுமே நீடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து அவர் கூறியதாவது, “இதுவரை நான் 28 முறை காதலை சொல்லி உள்ளேன். எனது கனவு முழுவதும் எனது திருமணம், மற்றும் என் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி தான் இருக்கும். உண்மையான அன்பு கிடைக்கும் வரை திருமணம் செய்வதை நிறுத்த மாட்டேன். என் பல திருமணங்கள் தோல்வியில் முடிந்த போதும் உண்மையான காதல் மற்றும் நேசத்தை நான் இன்னும் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X