Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Freelancer / 2025 மார்ச் 13 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹோலி பண்டிகை பேரணியின்போது, 10 மசூதிகளை தார்பாய் போட்டு மூடுவதற்கு, உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
வட இந்தியாவில், ஹோலி பண்டிகை,வெள்ளிக்கிழமை (14) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், அன்றைய தினம் இஸ்லாமியர்கள் ஜும்ஆ தொழுகையை மேற்கொள்வார்கள். சுமார் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹோலி பண்டிகையும், ஜும்ஆ தொழுகை தினமும் ஒரே நாளில் வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், உத்தர பிரதேச் மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 'சவுபாய்' என்ற பேரணி நடைபெறவுள்ளது. இந்த பேரணிக்கான பாதையில் சுமார் 10 பள்ளிவாசல்கள் உள்ளன. அந்த 10 பள்ளிவாசல்களையும் திரையிட்டு மூடுவதற்கு, உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சம்பல் பொலிஸ் எஸ்.பி. சிரீஷ் சந்திரா கூறுகையில், "சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்கும், இரு சமூகத்தினரும் தங்கள் பண்டிகைகளை முழு மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடுவதற்கு வசதியாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago