Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Freelancer / 2025 மார்ச் 13 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹோலி வண்ணங்களிலிருந்து பாதுகாக்க, முஸ்லிம்களை தார்பாலினாலான ஹிஜாப் அணியக் கூறி, உத்தர பிரதேச மாநில கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் ரகுராஜ் சிங் அறிவுரை வழங்கி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
வெள்ளிக்கிழமை (14), ஹோலி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஹோலியை முன்வைத்து உத்தர பிரதேச பாஜக தலைவர்கள் தொடர்ந்து முஸ்லிம்களை விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து பாஜக ஆளும் உ.பி.யில் மாநில கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் ரகுராஜ் சிங் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,
“இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை தொழுகையுடன் ஹோலியும் கொண்டாடப்பட உள்ளது.
“இந்த ஹோலியில் வண்ணங்கள் வீசி விளையாடிக் கொள்வார்கள். முஸ்லிம்கள் தங்கள் வெள்ளைத் தொப்பிகளையும், ஆடைகளையும் வண்ணங்களிலிருந்து பாதுகாக்க விரும்பினால், அவர்கள் தார்பாலினாலான ஹிஜாப் அணிய வேண்டும்.
“ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் தங்கள் நிறங்கள் எங்கு விழுகின்றன என்பதை பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். எனவே, ஹோலியில் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வது முஸ்லிம்களின் பொறுப்பாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago