2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

ஹோலி கொண்டாட்டத்தில் மோதல்; மூவர் பலி

Freelancer   / 2025 மார்ச் 16 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடக மாநிலம்,  பெங்களூரு புறநகர்ப் பகுதியில், ஹோலி கொண்டாட்டத்தின்போது, மதுபோதையில் சிலர் மோதிக்கொண்டதில், 3 பேர் உயிரிழந்தனர்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர், பெங்களூருவின் அனேகல் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு அவர்கள் 6 பேரும் மது அருந்தி கொண்டாடியுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

தகாத வார்த்தைகளால் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டதை தொடர்ந்து மரக்கட்டைகள் மற்றும் இரும்புக் கம்பிகளால் ஒருவரையொருவர் தாக்கினர். இந்த மோதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

 தலைமறைவாகி உள்ள  இரு சந்தேக நபர்களையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .