2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

ஹோலி கொண்டாட்டத்தில் கஞ்சா விற்பனை

Freelancer   / 2025 மார்ச் 16 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கானா மாநிலம், தூல்பேட் பகுதியில் ஹோலி பண்டிகையானது கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் போது குல்பி, சாக்லேட்டுகள் மற்றும் இனிப்புகள் அங்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இனிப்புகளில் கஞ்சா கலந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பொலிஸார் தூல்பேட் பகுதியில் ஹோலி கொண்டாட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட இனிப்புகளை ஆய்வு செய்தனர்.

 அங்கு விற்பனை செய்யப்பட்ட குல்பி, சாக்லேட்டுகள் மற்றும் இனிப்புகளில் கஞ்சா கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை விற்பனை செய்த சத்திய நாராயண சிங் என்கிற விற்பனையாளரை பொலிஸார் கைது செய்தனர்.

மேலும் 100 கஞ்சா கலந்த குல்பி மற்றும் 71 இனிப்புகளையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .