2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வெள்ளத்தில் மிதக்கிறது விழுப்புரம்

Editorial   / 2024 டிசெம்பர் 01 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு கொட்டித் தீர்த்த அதி கனமழையால் பல்வேறு இடங்களும் வெள்ளத்தில் மூழ்கியதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவித்துவருகின்றனர்.

வங்கக் கடலில் கடந்த 4 நாட்களாக அனைவருக்கும் போக்கு காட்டி அமைதியாக இருந்து வந்த ஃபெஞ்சல் புயல் தற்போது தன் கோரத்தாண்டவத்தைக் காட்டி விட்டது.

அந்த அளவுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் அதி கனமழை கொட்டி தீர்த்துள்ளது. நேற்று காலை ஆரம்பித்த மழை தற்போது வரை இடைவிடாமல் தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 50 சென்டி மீட்டருக்கும் மேல் மழை பெய்துள்ளது. இதேபோல் வானூர், மரக்காணம், திண்டிவனம் உள்ளிட்ட இடங்களில் 40 செமீட்டருக்கும் மேல் மழை பெய்துள்ளது. இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் 50 செமீட்டர் அளவுக்கு எப்போதுமே மழை பெய்தது இல்லை. விழுப்புரம் நகரில் வரலாறு காணாத மழைப் பொழிவை ஃபெஞ்சல் புயல் தந்தது. விழுப்புரம் நகரம் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. அனைத்து பகுதிகளிலுமே குடியிருப்புப் பகுதிகளை பெருமளவு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X