Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2024 மே 28 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத் தலைநகரில் உள்ள அரசு எஸ்எம்எஸ் மருத்துவமனைப் பிணவறை கடந்த இரு வாரங்களாக நிரம்பி வழிவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவற்றில் பல சடலங்கள் சாலையோரத்திலிருந்து சேகரிக்கப்பட்டதால், வெயில் தாங்காமல் அவர்கள் இறந்திருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமையன்று (25) அஜ்மீர் அருகே சாரணா எனும் சிற்றூரைச் சேர்ந்த மோத்தி சிங் என்ற 40 வயது நபர் வெயிலின் தாக்கத்துக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இவ்வாண்டில் வெயில் தாக்கத்தால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு அது என்று ராஜஸ்தான் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானில் 50 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெயில் கொளுத்துவதால் சில மாநிலங்களில் உயிரிழப்பும் உடல்நலப் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆயினும், மோத்தியின் மரணத்திற்கு முன் வெப்பத் தாக்கத்தால் எவரும் உயிரிழக்கவில்லை என்று மாநில அரசு மறுத்து வந்தது.
இதனிடையே, எஸ்எம்எஸ் மருத்துவமனைப் பிணவறையில் குவியும் பிணங்களின் எண்ணிக்கை வெயிலால் பலர் மடிந்துபோனதற்குச் சான்று எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இம்மாதம் 10ஆம் திகதி அங்கு 22 சடலங்கள் இருந்த நிலையில், இப்போது அது கிட்டத்தட்ட இரட்டிப்பாகி, 42ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களில் பாதிப் பேரை அடையாளம் காண முடியவில்லை என்பதோடு, அவர்களின் சடலங்களைக் பொலிஸார் சாலையோரங்களில் கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இறந்தவர்களின் உடல்களை வைக்க இடமின்றி மருத்துவமனைப் பணியாளர்கள் அல்லாடுகின்றதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், உயிரிழப்பு அதிகரித்திருப்பதற்கு கொளுத்தும் வெயிலே காரணம் என அதிகாரிகள் கூறினாலும், விரிவான வழிகாட்டி நெறிமுறைகளால் அவற்றை வெப்பத் தாக்க மரணம் என அதிகாரபூர்வமாக வகைப்படுத்தி, அறிவிக்க இயலவில்லை என்று ‘டைம்ஸ் ஒஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago