2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை தொடங்கும் மோடி

Freelancer   / 2024 மே 30 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணி நேரம் தியானத்தை பிரதமர் மோடி இன்று தொடங்குகிறார். இதையொட்டி அங்கு கடற்படையினர் மற்றும் 3,500 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடிக்காக 3 நவீன சொகுசு அறைகள் தயாராகி வருகின்றன.

அதில் ஒன்று பிரதமர் மோடியின் அலுவலகமாகவும், ஒன்று ஓய்வு எடுக்கவும், மற்றொன்று சமையல் கூடமாகவும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தேவையான உணவு அங்கேயே தயாரித்து வழங்கப்பட இருக்கிறது. இதற்காக சமையல்காரரும் நியமிக்கப்படுகிறார். அங்குள்ள தியான கூடமும் தியானம் செய்வதற்கு வசதியாக தயார் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பிரதமர் மோடி தியானம் செய்யும் 3 நாட்களிலும் விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள பாதம் வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், பைகள் கொண்டு செல்ல அனுமதியில்லை. சுற்றுலா பயணிகள், ஆதார் அல்லது அடையாள அட்டையை காண்பித்து, பலத்த சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், மோடி தரிசனம் செய்ய உள்ள பகவதி அம்மன் கோயிலிலும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.S

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .