2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

விமான பயணிகளை கடித்து தாக்கிய பெண் பயணி

Freelancer   / 2024 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனேவில் இருந்து புதுடெல்லி செல்லும் விமானத்தில் ஏறிய பெண் பயணி ஒருவர், காவலர்கள் மற்றும் இரண்டு சக பயணிகளை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி மேலும் தெரியவருகையில், மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து, புதுடெல்லி செல்லும் விமானத்தில் 44 வயதான சுரேகா சிங் என்ற பெண் ஏறியுள்ளார்.

அவருக்கும் சக பயணிகளான அன்விதிகா போர்ஸ் மற்றும் ஆதித்யா போர்ஸ் ஆகியோருடன் இருக்கை ஏற்பாடுகள் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அண்ணன், சகோதரி இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்துள்ளதாக கூறியதால், சுரேகா சிங் ஆத்திரம் அடைந்துள்ளார்.

வாக்குவாதம் கை கலப்பாக மாறிய நிலையில், பெண் காவலர்கள் பிரச்சினையை சரி செய்ய முயற்சித்துள்ளனர். அவர்களையும் தாக்கிய சுரேகா, சரமரியாக கடித்துக் குதறியுள்ளார். நிலைமை மோசமடைந்த நிலையில், இறுதியாக சுரேகா சிங் மற்றும் அவரது கணவரை விமானத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

இந்நிலையில், விமான நிலைய பொலிஸில் சுரேகா மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், இது குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில், தனிப்பட்ட அவசர நிலை காரணமாக அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் சக பயணிகளுடன் எல்லை மீறி நடந்துகொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .