2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

விபத்தில் 8 சிறுவர்கள் உட்பட 12 பேர் பலி

Freelancer   / 2024 ஒக்டோபர் 20 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தானில், சனிக்கிழமை (19) இரவு இடம்பெற்ற விபத்தில், 8 சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

குவாலியரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்று, தோல்பூர் மாவட்டத்தில் உள்ள சுனிபூர் அருகே வந்துகொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, அவ்வழியாக வந்த மாறி ஒன்றுடன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

 பஸ் சாரதி அதிக வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது..

உயிரிழந்த சிறுவர்கள் 6 முதல் 14 வயதுக்கு. இடைப்பட்டவர்கள் எனவும், உயிரிழந்தவர்களில் தம்பதி ஒன்று உள்ளடங்குவதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .