2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

விநோத நோய்க்கு 5 வயது சிறுமி பலி

Freelancer   / 2024 மே 22 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மூக்கு வழியாக நுழைந்து மூளையை உண்ணும் ‘அமீபிக்’ என்ற விநோத நோய்க்கு கேரளாவைச் சேர்ந்த 5 வயது சிறுமி பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எப்போதுமே குழந்தைகளை, எல்லா நோய்களும் எளிதில் தாக்கி விடக் கூடிய அபாயம் உள்ளது. பொதுவாக, எல்லாச் சூழ்நிலைகளிலுமே ஏதாவது ஒரு நோய், குழந்தைகளைத் தாக்கிக் கொண்டே இருப்பது இயல்து என்றாலும் அவற்றிடமிருந்து அவர்களைப் பாதுகாப்பது பெற்றோரின் கட்டாய கடமையாகும்.

அந்த வகையில் கேரள மாநிலத்தில், குளத்தில் குளித்த சிறுமி ஒருவருக்கு, விநோத பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது மருத்துவ உலகையே அதிரவைத்துள்ளது.

கேரள மாநிலம், மலப்புரம் மூன்னியூர் பகுதியில் வசித்து வந்த 5 வயதுச் சிறுமி ஒருவர், கடந்த மே முதலாம் திகதி, வீட்டின் அருகிலிருந்த குளத்தில் குளித்துள்ளார்.

பின்னர், மே 10ஆம் தேதி முதல் அந்தச் சிறுமிக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதற்கிடையே சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமி கடந்த மே 20ஆம் திகதி உயிரிழந்தார்.

இதையடுத்து அந்தச் சிறுமியின் மரணம் குறித்து மருத்துவர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். அதில்தான் அந்தச் சிறுமிக்கு அமீபிக் என்செபாலிடிஸ் என்ற பாதிப்பு இருந்ததை உறுதி செய்துள்ளனர். இந்த பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழக்க 97 சதவீத வாய்ப்பு இருக்கிறது.

இது, பொதுவாக ‘மூளையை உண்ணும் அமீபா’ எனப்படும். குழந்தையின் மூளையில் 'நாகிலேரியா ஃபோலேரி’ (Naegleria fowleri) அமீபா இருந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அசுத்தமான நீரில் காணப்படும் இந்த வகை அமீபா, ஒட்டுண்ணி வகையைச் சாராதது.

இவை, மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்து மூளையை அடைந்து மூளைத் திசுக்களை அழிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இறந்த சிறுமியுடன் சேர்ந்து குளத்தில் குளித்த மற்ற குழந்தைகளும் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக இந்த வகைத் தொற்று மூலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த 2017, 2023 ஆண்டுகளில் சிலர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .