2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வாகனத்தை கழுவினால் அபராதம்

Freelancer   / 2024 மே 29 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லியில் கடுமையான பஞ்சம் காரணமாக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குடிநீரை வணிக நோக்கத்தில் பயன்படுத்துவது, வாகனத்தை கழுவுவது ஆகியவற்றை செய்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

தலைநகர் புது டெல்லியில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், தட்டுப்பாட்டை போக்க மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இது தொடர்பாக ஆய்வு செய்ய 200 குழுக்களை அமைத்து, குடிநீர் வீணாவதை தடுக்கும் பணிகளில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதன்படி, இக்குழுவினர் வீடு வீடாக சென்று சோதனை செய்ய உள்ளனர். அப்போது, குழாய் மூலம் குடிநீரில் வாகனம் கழுவுவது, தண்ணீர் தொட்டி நிரம்பி வடிய செய்தல், வீட்டு உபயோக குடிநீரை வணிக காரணங்களுக்காக பயன்படுத்துவது, வீட்டு கட்டுமான பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்துவது ஆகியவற்றை செய்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .