2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்?

Freelancer   / 2024 ஜூலை 31 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 147 பேர் உயிரிழந்த நிலையில், கனமழை தொடர்வதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கேரள மாநிலம், வயநாட்டில் பெய்த அதி கனமழையால் மலைகளுக்கு இடையே உள்ள முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் தேயிலை தோட்டங்கள், சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதில் அந்த பகுதியில் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், நிலச்சரிவில் சிக்கி 147 பேர் பலியாகினர். நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகளில் வசித்த 400 பேரின் கதி கேள்விக்குறியாகியுள்ள அதேசமயம், பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், வயநாடு உள்ளிட்ட 8 கேரள மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது கனமழை பெய்து வருவதால் வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .