2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.6 இலட்சம் நிதியுதவி

Freelancer   / 2024 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.6 இலட்சம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்தனர். போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில் மண்ணில் புதைந்து உயிரிழந்த நிலையில் ஏராளமான சடலங்கள் மீட்கப்பட்டன.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மேலும் பலர்  சிகிச்சை பெற்று வருகின்றனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.6 இலட்சம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

மேலும், நிலச்சரிவால் படுகாயமடைந்த நபர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 வாடகை உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .