2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வன்புணர்ந்த உத்தமத்துக்கு என்கவுண்டர்

Freelancer   / 2024 ஜூன் 02 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த உத்தம் என்பவர், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் குறி வைத்து துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இவரால் பல பெண்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து உத்தம் மீது தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், வழக்குப் பதிவு செய்த பொலிஸார் அவரை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் உத்தம் மதுராவில் உள்ள ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடத்துள்ளதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உத்தமை சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றுள்ளனர். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கை துப்பாகியை எடுத்து உத்தம் அவர்களை நோக்கி சுட்டுள்ளார்.

இதையடுத்து பொலிஸார் தற்காப்புக்காக உத்தமை நோக்கிச் சுட்டுள்ளனர். இதில் உத்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின் உத்தம் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், குற்றவாளி பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, குண்டுகள், இருசக்கர வானங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் உத்தமால் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளான பெண்கள் இந்த என்கவுண்டரை வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .