Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2024 மே 23 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்துக்கு சிகிச்சைக்கு வந்த வங்கதேச நாட்டின் எம்பி அன்வருல் அசீம் துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படுகொலை சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேச நாட்டின் எம்.பியான அன்வருல் அசீம், கொல்கத்தா மஜிதியா பகுதியில் சுபாஷ் அகர்வால் என்பவர் வீட்டில் முன்னர் வசித்து வந்தார். கொல்கத்தாவின் சிந்தி பகுதியை சேர்ந்த நகை ஏற்றுமதியாளர் கோபால் பிஸ்வாஸின் நெருங்கிய குடும்ப நண்பராகவும் இருந்தவர் அன்வருல் அசீம்.
கொல்கத்தாவில் நரம்பியல் மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்திருந்தார் அன்வருல் அசீம். கடந்த 13-ந் திகதி கோபால் பிஸ்வால் வீட்டில் இருந்து புறப்பட்ட அன்வருல் அசீம் திடீரென மாயமானார். இதனால் அவரை கொல்கத்தா பொலிஸார் வலைவீசித் தேடி வந்தனர். 4 நாட்கள் தேடுதலுக்குப் பின்னர் மே 17-ந் திகதி அன்வருல் அசீம் போன் சுவிட்ச் ஆனதால் தேடுதம் பணி முடங்கியது.
இந்த நிலையில் வங்கதேசத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 3 பேரும்தான் கொல்கத்தாவில் வங்கதேச எம்பி அன்வருல் அசீமை துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்ததாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இந்த கொலைக்கான காரணத்தை உடனடியாக தெரிவிக்க முடியாது; இதில் ரகசியம் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார் வங்கதேச உள்துறை அமைச்சர்.
கொல்கத்தாவில் வங்கதேச எம்பி மாயமானது தொடர்பாக கொல்கத்தா பொலிஸ் ஒரு பக்கம் தேடுதல் நடத்திய நிலையில் வங்கதேச காவல்துறையும் விசாரணை நடத்தியது. இந்த விசாரணைகளின் அடிப்படையில் அன்வருல் அசீமை படுகொலை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனராம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago