2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

’லக்கி பாஸ்கர்’ படத்தை பார்த்து 4 மாணவர்கள் தப்பியோட்டம்

Freelancer   / 2024 டிசெம்பர் 11 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திர மாநிலம் - விசாகப்பட்டினத்தில், 'லக்கி பாஸ்கர்' படம் பார்த்து பாடசாலை மாணவர்கள் 4 பேர் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கிப் படிக்கும் 9ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேர், செவ்வாய்க்கிழமை (10),  துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான “லக்கி பாஸ்கர்” படத்தை பாரத்ததாக கூறப்படுகிறது.

அப்போது, அதில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கும் துல்கர் சல்மான், இறுதியில் கார், வீடு என பெரிய செல்வந்தராக மாறியிருப்பார். இது அந்த மாணவர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. 

இதனால், அதேபோல வீடு, கார் வாங்கிவிட்டு வருவதாக நண்பர்களிடம் கூறி விடுதியில் இருந்து தப்பியோடி இருக்கிறார்கள். இது குறித்தான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, அவர்கள் காணாமல் போனதை அறிந்த அவர்களது பெற்றோர்கள், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்தனர். 

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X