Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2024 மே 28 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கு வங்கம், பங்களாதேஷ் இடையே கரையை கடந்த ரெமல் புயலால் மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து கடும் சேதம் ஏற்பட்ட நிலையில், புயல் பாதிப்பால் மொத்தம் 16 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கொல்கத்தாவில் உள்ள என்டலியின் பிபிர் பாகன் பகுதியில் இடைவிடாத மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார். மேலும், தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் 2 பெண்களும், வடக்கு 24 பர்கனாசின் பனிஹட்டி பகுதியில் ஒருவரும், புர்பா மெதினிபூரில் தந்தை, மகன் என மேற்கு வங்கத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். பங்களாதேசில் பரிசால், போலா, பதாகலி, சத்கிரா, சட்டோகிராம் ஆகிய கடலோர பகுதிகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேசமயம், பங்களாதேசின் பெரும்பாலான கடலோர பகுதிகளில் கடும் சூறாவளியால் மரங்கள் வேரோடு முறிந்தும், மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சுமார் 1.5 கோடி பேர் இருளில் மூழ்கினர். புயல் முற்றிலும் வலுவிழந்த பிறகு நேற்று பிற்பகலுக்குப் பிறகு மின்சாரம் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், கொல்கத்தா, நாடியா மற்றும் முர்ஷிதாபாத் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று காலை வரை பலத்த காற்றுடன் கனமழை நீடித்தது. இதனால் கொல்கத்தாவில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாகின. சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக தலைமைச் செயலரிடம் தொலைபேசியில் பேசி தகவல்களை கேட்டறிந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், ‘‘நேற்று முன்தினம் முதல் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். ரெமல் புயலுக்கு மேற்கு வங்கத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். பலரது குடிசை, மண் வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. பயிர்கள் சேதமடைந்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வேண்டிய உதவிகளை செய்வோம். விரைவில் புயல் பாதிப்புகளுக்கு நேரில் சென்று பார்வையிடுவேன்’’ என்றார்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago