2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ராஜஸ்தானில் கன மழை: 20 பேர் பலி

Freelancer   / 2024 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கொட்டிய கன மழை காரணமாக, இதுவரை 20 பேர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர், கரௌலி, சவாய் மாதோபூர் உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில், பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மழை பாதித்த பகுதிகளில் மாநில அரசு பாசாலைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

ஜெய்ப்பூரில் நிரம்பி வழியும் கனோடா அணை நீரில் மூழ்கி, 5 இளைஞர்கள் உயிரிழந்த நிலையில், உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. மேலும், பாரத்பூரில் ஸ்ரீநகர் கிராமம் அருகே உள்ள ஆற்றில் மூழ்கி, ஏழு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

அதேசமயம், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், மோட்டார் சைக்கிளுடன் அடித்துச் செல்லப்பட்டதில் இரு இளைஞர்கள் இறந்தனர். இந்நிலையில், மழை காரணமாக, இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, பேரிடர் மேலாண்மை நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக, முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் பேசிய அவர், 'மாநில மக்கள் அனைவரும், நீர்நிலைகளுக்கு அருகில் செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பேரிடர் மேலாண்மைத் துறையினர் வழங்கும் அறிவுரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்” என அறிவுரை வழங்கி உள்ளார்.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .