2025 பெப்ரவரி 05, புதன்கிழமை

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு:விசாரணைக்கு தடை உத்தரவு

Freelancer   / 2025 ஜனவரி 20 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு தொடர்பான விசாரணைக்கு, உச்சநீதிமன்றம்  தடை விதித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து பேசியது சர்ச்சையானது. 

இதுதொடர்பாக பாஜக தொண்டர் நவீன் ஜா என்பவர் ஜார்கண்ட் மேல்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஜார்கண்ட் மேல்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஜார்கண்ட் மேல்நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையை தடை செய்யக் கோரியும், வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியும் ராகுல் காந்தி தரப்பில் உச்சநீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதையடுத்து, இன்று (20)  விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர் அல்லாத ஒருவர் எப்படி புகார் அளிக்க முடியும் என்று ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி வாதிட்டார். 

இதனை தொடர்ந்து, மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கை விசாரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X