Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 ஜூலை 01 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பா.ஜ.,வின் இந்துக்கள் வன்முறையாளர்கள்; உண்மையான இந்துக்கள் அல்ல” எனப்பேசிய ராகுலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ., எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியதால் லோக்சபாவில் அமளி ஏற்பட்டது.
லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சிவபெருமான், இயேசு, குருநானக் உள்ளிட்ட படங்களை காண்பித்து பேசினார். அவையின் விதிப்படி எந்தவொரு மத கடவுளின் படத்தையும் காண்பிக்க கூடாது என பா.ஜ., எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து ராகுல் பேசியதாவது:
“பிரதமர் மோடி ஒட்டுமொத்த இந்து மதத்தின் பிரதிநிதி அல்ல. ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமல்ல, நமது அனைத்து மதங்களும் துணிச்சலை பற்றி, அகிம்சையை பற்றிதான் பேசுகின்றன. பா.ஜ.,வின் இந்துக்கள் வன்முறையாளர்கள்; உண்மையான இந்துக்கள் அல்ல. இந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களை பரப்பும் மதம் அல்ல. பா.ஜ., 24 மணி நேரமும் வன்முறை, வெறுப்பு ஆகியவவை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறது. இந்து மதம் அகிம்சையை போதிக்கிறது வெறுப்பை அல்ல” இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது இடைமறித்த பிரதமர் மோடி, “ராகுலின் பேச்சு ஒட்டுமொத்த இந்துக்களின் மீதான தாக்குதல். அவர்களை வன்முறையாளராக காட்ட ராகுல் முயற்சிக்கிறார்” எனக் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் கட்சி எம்.பி.,க்கள் இந்திய அரசியலமைப்பு சாசனத்தை சுட்டிக்காட்டி வலியுறுத்தினர். அப்போது மீண்டும் சிவபெருமானின் படத்தை எடுத்துக் காட்டியதுடன், அயோத்தியை உள்ளடக்கிய தொகுதியில் வெற்றிபெற்ற சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.,க்கு ராகுல் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், 'அயோத்தியில் ராமர் பிறந்த மண்ணிலேயே பா.ஜ.,விற்கு பாடம் புகட்டப்பட்டுள்ளது” என்றார்.
இவ்வாறு ராகுல் பேசிய சர்ச்சை பேச்சால் லோக்சபாவில் ஏற்பட்ட அமளி சில மணிநேரங்கள் நீடித்தது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago