2025 பெப்ரவரி 05, புதன்கிழமை

ரயிலில் மோதி 12 பேர் பலி

Freelancer   / 2025 ஜனவரி 23 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயிலில் தீவிபத்து என புரளி ஏற்பட்டதைத் தொடர்ந்து, தண்டவாளத்தில் குதித்த 12 பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம், ஜல்காவ்ன் மாவட்டம், மஹேஜி-பார்த் ஹடே ரயில் நிலையங்களுக்கு இடையே, புதன்கிழமை (22) மாலை 5 மணியளவில் லக்னோ-மும்பை புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. 

அப்போது ரயிலில் தீபிடித்து விட்டது என யாரோ புரளியைக் கிளப்பினர். இதையடுத்து பயணிகள் சிலர் அபாயச் சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தினர். ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுவிட்டது என்ற பயத்தால், ரயிலில் இருந்த பயணிகள் அலறிக் கொண்டு கீழே இறங்கினர். சில பயணிகள் அருகில் இருந்த தண்டவாளம் வழியாக ஓட முயன்றனர்.

அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-டெல்லி கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் மீது மோதியது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு மாநில அரசு சார்பில் ரூ.5 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X