2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்:18 பேர் பலி

Freelancer   / 2025 பெப்ரவரி 16 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெல்லி ரயில் நிலையத்தில், சனிக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

 கும்பமேளா விழா  நிகழ்வில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துறவிகள், சாதுக்கள், ஆன்மிக தலைவர்கள் மற்றும் பக்தர்கள் என இலட்சக்கணக்கானோர் பிரயாக்ராஜ் வந்து செல்கிறார்கள்.

அந்த வகையில்,  டெல்லி ரயில் நிலையத்தில், சனிக்கிழமை (15) இரவு, பயங்கர கூட்ட நெரிசல் காணப்பட்டது. உத்தர பிரதேசம் செல்லும் ரயிலில் ஏற ஒரே நேரத்தில் பயணிகள் முண்டியடித்துள்ளனர்.இரவு 9:15 மணிக்கு அதிகளவில் பயணிகள் திரண்டனர். இதையடுத்து 13, 14 மற்றும் 15-வது பிளாட்பாரங்களில் கூட்ட நெரிசல் அதிகமானது. இதனால் நெரிசல் ஏற்பட்டு 3 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், பலர் காயம்டைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கிடையே, இந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

 தற்போது கூடுதலாக 4 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி ரயில் நிலையத்தில் தற்போது கூட்டம் குறைந்து இருப்பதாகவும், ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனனர்.

மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 இலட்சம் (இந்திய பெறுமதி) நிதியுதவி அறிவித்துள்ளது. மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2.5 இலட்சம் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 இலட்சம் நிதியுதவிவை, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .