2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

யானைக்கு ஸ்வீட் கொடுத்தவருக்கு எதிராக வழக்கு

Editorial   / 2024 மே 21 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

யானைக்கு இனிப்பு கொடுப்பதில் நடந்த விளையாட்டு போட்டி விபரீதமாக முடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்தவர் சவுக்கத். இவர் தனது உறவினர்களுடன் வால்பாறைக்கு சுற்றுலா சென்றிருந்தார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்து கேரள எல்லை பகுதியான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவ்வழியில் யானை ஒன்று நின்று கொண்டிருப்பதை கண்டுள்ளனர்.

இந்நிலையில், அந்த யானைக்கு யார் இனிப்புகளை வழங்குகிறார்களோ, அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என சவுக்கத்தின் உறவினர் ஒருவர் கூறியுள்ளார். இதனையடுத்து, உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய சவுக்கத், யானை அருகே சென்று இனிப்பை கொடுக்க முயன்றார். அப்போது கோபமடைந்த யானை சவுக்கத்தை ஆக்ரோஷமாக துரத்தியது. இதனை சுதாரித்துக்கொண்ட அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.

இதையடுத்து, இதுகுறித்து வீடியோ வெளியான நிலையில், வன விலங்குகளை துன்புறுத்தியதாக சவுக்கத் மீது கேரளா சாலக்குடி வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரது வாகனத்தை பறிமுதல் செய்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .