2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை

யாசகம் போட்டவருக்கு சிக்கல்

Freelancer   / 2025 பெப்ரவரி 05 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய பிரதேசத்தில் யாசகம் எடுப்பதும், யாசகம் கொடுப்பதும் சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ள  நிலையில், அங்கு யாசகர் ஒருவருக்கு யாசகம் போட்ட நபரொருவருக்கு எதிராக பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்தூர் நகரில் உள்ள கோவில் முன்பு யாசகர் ஒருவர் யாசகம் எடுத்துக்கொண்டிருந்தார். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், யாசகருக்கு 10 ரூபாய் யாசகம் போட்டுள்ளார்.

இதை அறிந்த யாசக ஒழிப்பு குழு, குறித்த நபருக்கு எதிராக யாசகம் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. யாசகம் போட்ட நபர் கைது செய்யப்பட்டால் அவருக்கு இந்த சட்டப்பிரிவின் கீழ் ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம். 

ஏற்கெனவே கடந்த ஜனவரி 23ஆம் திகதி, காண்ட்வா கோவில் பகுதியில், நபர் ஒருவர் யாசகம் போட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

"இந்தூரை யாசகர்கள் இல்லாத முதல் இந்திய நகரமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதத்தில் 600 யாசகர்கள் அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பு இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

“அதேபோல 100 சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். அதேபோல், யாசகம் எடுப்பவர்கள் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.1,000 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது" என்று, யாசகம் ஒழிப்பு குழு அதிகாரி ஒருவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X