2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மோடிக்கு கிடைத்த பெருமை

Freelancer   / 2024 ஜூலை 08 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் இந்தியா - ரஷ்யா இடையிலான 22வது உச்சி மாநாடு இன்று (08) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மோடி இன்று ரஷ்யா செல்கிறார்.

அங்குச் சென்ற பிறகு, இரு நாட்டு உறவுகள், உலகளாவிய முக்கிய பிரச்சினைகள் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புடினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து மோடி, இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்ற உள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டிற்குப் பிறகு சுமார் 5 ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி, ரஷ்யா பயணிக்கிறார். 2019ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி நேரில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, பிரதமர் மோடி ரஷ்யாவில் இருந்து நாளை (09) ஆஸ்திரியா செல்கிறார். அங்குச் சென்ற அவர், அந்நாட்டு ஜனாதிபதி அலெக்ஸாண்டர் வான்டெர் பெல்லனை சந்தித்துப் பேசுகிறார். அதனைத் தொடர்ந்து, அந்நாட்டுப் பிரதமர் கார்ல் நெகமருடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இந்நிலையில், 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரியாவிற்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .