2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

’மோடி தலைமையிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்’

Freelancer   / 2025 ஜனவரி 26 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இந்திய பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடனான பணியில் இருந்து நிறைய கற்று கொண்டேன்” என, இந்தோனேசிய ஜனாதிபதி கூறியுள்ளார்.

நாட்டின் 76ஆவது குடியரசு தின கொண்டாட்டங்களில்  கலந்துகொள்வதற்காக, இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியந்தோ இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். 

அவருடைய முதல் இந்திய பயணம் இதுவாகும். அவரை ஜனாதிபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர்  வரவேற்றனர்.

இந்நிலையில், டெல்லியில் நடந்த சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் கூட்டத்தின் முன் இந்தோனேசிய ஜனாதிபதி சுபியந்தோ பேசும்போது, 

“இந்தியாவுக்கு வருகை தந்ததற்காக நான் பெருமை கொள்கிறேன். பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடனான பணி ஆகியவற்றில் இருந்து நான் நிறைய கற்று கொண்டேன்.

“வறுமையை ஒழிப்பது, விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு உதவுவது மற்றும் சமூகத்தில் பலவீன நிலையில் உள்ளவர்களுக்கு உதவுவது ஆகிய அவருடைய பணிகள் எங்களுக்கு உத்வேகம் ஏற்படுத்துகிறது.

“இதேபோன்று, வருகிற ஆண்டுகளில் இந்திய மக்களுக்கு வளமும், அமைதியும் மற்றும் சிறந்த விசயங்கள் வந்து சேரட்டும்” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .