2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

மேடை சரிந்து காங்கிரஸ் நிர்வாகிகள் காயம்

Freelancer   / 2025 மார்ச் 11 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது மேடை சரிந்ததால் காங்கிரஸ் நிர்வாகிகள் காயமடைந்தனர்.

மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் உள்ள ரங்மஹால் சதுக்கம் பகுதியில், காங்கிரஸ் எம்எல்ஏ ஜெய்வர்தன் சிங் தலைமையில் நேற்று (10) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏறி நின்று, ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

ஆளும் பாஜக அரசின் விவசாய விரோதக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பாரம் தாங்காமல் மேடை சரிந்து விழுந்தது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் காயமடைந்தனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .