Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 02 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரபிரதேச மாநிலத்தில் மூடப்பட்டு கிடக்கும் கோவில்களை வழிபாட்டிற்கு திறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் முதற்கட்டமாக, மொரதாபாத் மாவட்டத்தின் தவுலதாபாக் பகுதியில் உள்ள கோவில் ஒன்று, 44 ஆண்டுகளுக்கு பிறகு, புதன்கிழமை (1) மீண்டும் திறக்கப்பட்டது.
2 சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மூடப்பட்டுக் கிடந்த இந்தக் கோவில், அரசு நிர்வாக முயற்சியின் மூலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மற்றும் நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில், இந்த கோவிலின் திறப்பு விழா நடைபெற்றது.
மக்கள் ஏகோபித்த ஆதரவு அளித்ததால், எந்தவித எதிர்ப்பு மற்றும் அசம்பாவிதமின்றி கோவில் திறக்கப்பட்டது. அப்போதுதான் சில சிலைகள் சாய்ந்தும், மாயமாகியும் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கோவில் நிர்வாகிகள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, அவற்றை சரி செய்யும் பணியில் இறங்கியுள்ளனர். விரைவில் வழக்கமான வழிபாடுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago