Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 16 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் ஐயப்ப பக்தர்களுக்கும் சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று, மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு தரிசனத்தையொட்டி, அடுத்த மாதம், அடுத்த மாதம் 15ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படவுள்ளது.
டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி மண்டல பூஜையும், வருகிற ஜனவரி மாதம் 14ஆம் திகதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.
நடப்பு பூசையை முன்னிட்டு, உடனடி முன்பதிவு வசதி இரத்து செய்யப்பட்டு ஒன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டும் தினசரி 80 ஆயிரம் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க கடந்த 5ஆம் திகதி முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு, பந்தளம் அரச கும்பத்தினர், இந்து அமைப்புகள், ஐயப்பா சேவா சங்கங்கள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. உடனடி தரிசன வசதியை கடந்த ஆண்டை போல் நடைமுறைப்படுத்த அரசாங்கத்துக்கு இந்த அமைப்புகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (15), சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது பேசிய மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ஒன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் ஐயப்ப பக்தர்களுக்கும் மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago