Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Mayu / 2024 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் தனது 93 வயதில் உடல் நலக்குறைவால் சனிக்கிழமை (11) காலமானார்.
முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் நட்வர் சிங்க் ராஜஸ்தான் மாநிலத்தின் பாரக்பூர் மாவட்டத்தை சேர்ந்தவராவார். அவர் நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு குருகிராமில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த சில வாரங்களாக தீவிரமாக சிகிச்சை பெற்று வந்த நட்வர் சிங் சனிக்கிழமை (10) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இவர் 2004-2005 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சராக இப்பதவி வகித்தார். இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக 1966 முதல் 1971 வரையிலான காலகட்டத்தில் நட்வர் சிங் பாகிஸ்தான்கான இந்திய தூதராக பணியாற்றி வந்தார். இவருக்கு மத்திய அரசு 1984ஆம் ஆண்டு விருது வழங்கி பாராட்டியது.
இந்த நிலையில் உடல் நலக்குறைவால் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் காலமாகி உள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago