2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மாமியாரைக் கூலிப்படையை வைத்துக் கொன்ற மருமகள்

Freelancer   / 2024 மே 21 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருவண்ணாமலை மாவட்டம் தாமரை நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி ஆதிலட்சுமி. இந்தத் தம்பதிக்கு சிவசங்கர் என்ற மகன் உள்ளார். சிவசங்கருக்கும், சென்னையைச் சேர்ந்த சத்தியா என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில், மாமியார் ஆதிலட்சுமிக்கும், அவரது மருமகள் சத்தியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இது குறித்து சென்னை கொரட்டூரில் உள்ள அவரது அண்ணன் பிரபுவிடம் சத்தியா கூறியுள்ளார். இதையடுத்து, பிரபு கூறிய ஆலோசனைபடி கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருவண்ணாமலையைச் சேர்ந்த கூலி படையினர் ஆனஸ்ட்ராஜ், சரண், பத்திரிநாராயணன், முகமது அலி ஆகியோர் ஆதிலட்சுமியைத் தாக்கி கொலை செய்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, திருவண்ணாமலை பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையின் அடிப்படையில் பிரபு, சத்தியா, கூலிப்படையைச் சேர்ந்த ஆனஸ்ட்ராஜ், சரண், பத்திரிநாராயணன், முகமதுஅலி ஆகிய 6 பேரை பொலிஸார் கைது செய்தனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .