2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மாணவிகளுக்கு வாள் வழங்கிய எம்.எல்.ஏ

Freelancer   / 2024 ஒக்டோபர் 13 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீகார் மாநிலம், சீதாமர்ஹி நகரில் உள்ள கப்ரோல் சாலையில் சனிக்கிழமை (12) நடைபெற்ற விஜயதசமி கொண்டாட்டத்தின் போது, பாஜக எம்.எல்.ஏ மிதிலேஷ் குமார், அப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு வாள்களை வழங்கினார்.

பூஜைக்கு வந்த இடத்தில் சட்டமன்ற உறுப்பினர் மிதிலேஷ் குமார் பல துப்பாக்கிகள், வாள்கள் மற்றும் பிற ஆயுதங்களை வைத்து வணங்கினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், "எங்கள் சகோதரிகளை யாரேனும் தீயவர்கள் தொடத் துணிந்தால், அவர்களது கைகள் இந்த வாளால் வெட்டப்படும்."

“கைகளை வெட்டும் அளவுக்கு எமது சகோதரிகள்உருவாக்க வேண்டும். தேவை இருப்பின் நான் மற்றும் நாம் அனைவரும் இதை செய்ய வேண்டும். நம் சகோதரிகளுக்கு எதிராக தீய எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் அழிக்கப்பட வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .