2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை

மர்ம நோயால் 7 பேர் பலி

Freelancer   / 2025 பெப்ரவரி 11 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மராட்டியத்தில், ஜி.பி.எஸ். எனப்படும் மர்ம நோய் பாதிப்புக்கு இலக்காகி, 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மராட்டியத்தின் புனே நகரில், ஜி.பி.எஸ். எனப்படும் கில்லெயின்-பார்ரே சிண்ட்ரோம் எனப்படும் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது.

 இது குறித்து மராட்டிய சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில், 

“மொத்தம் 192 பேருக்கு பாதிப்புக்கான சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், இதுவரை 167 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

“இந்த மர்ம வியாதிக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு இந்த ஜி.பி.எஸ். பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மற்ற 6 பேரின் நிலையும் சந்தேக பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.

“இந்நிலையில், 48 நோயாளிகள் அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். 21 பேருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 91 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். “மாசுபட்ட தண்ணீரால் இந்த மர்ம நோய், பாதிப்பு ஏற்படுத்தி நோயாளிகளை பலவீனப்படுத்துகிறது.

“இதனால், நரம்பு மண்டலம் பாதிக்க தொடங்கி, தசை பலவீனம் மற்றும் முடக்கம் போன்ற பல்வேறு அறிகுறிகளும் ஏற்படுகின்றன. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X