Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 30 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் அஸ்தி, யமுனை நதியில், ஞாயிற்றுக்கிழமை (29) கரைக்கப்பட்டது.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 92) கடந்த 26ஆம் திகதி இரவு, டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் காலமானார்.
இதையடுத்து, சீக்கிய மத வழக்கப்படி அவரது உடல், யமுனை நதிக்கரையில் உள்ள நிகாம்போத் காட் பகுதியில் அரசு மரியாதையுடன் சனிக்கிழமை (28) தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மன்மோகன் சிங்கின் அஸ்தி, குருத்வாரா மஜ்னு கா திலா சாஹிபுக்கு ஞாயிற்றுக்கிழமை (29) காலை கொண்டுவரப்பட்டது. பின்னர் அருகில் உள்ள யமுனை நதியில் அவரது அஸ்தியை உறவினர்கள் கரைத்தனர்.
இதையடுத்து, மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கவுர், மகள்கள் உபிந்தர், தாமன், அம்ருத் உள்ளிட்ட உறவினர்கள் குருத்வாராவில் சடங்குகளை செய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago