Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 01 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
'பஹ்ராச் மாவட்டத்தில், மனிதர்களை வேட்டையாடி வந்த ஓநாய்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை இன்று அல்லது நாளைக்குள் பிடித்து விடுவோம்” என உத்தர பிரதேச வனத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
உத்தர பிரதேசத்தின் பஹ்ராச் மாவட்டம் மாஷி தாலுகாவில் வனப் பகுதியை ஒட்டிய கிராமங்களில் இரவு நேரத்தில் வீடுகளுக்குள் நுழையும் மர்ம விலங்குகள், குழந்தைகளை கௌவிச் சென்று, இரையாக தின்று விடுவதை வழக்கமாக வைத்துள்ளன. கடந்த, 45 நாட்களில் மட்டும் ஏழு குழந்தைகள் உட்பட எட்டு பேரைக் கொன்றுள்ளன.
இந்நிலையில், அவை சாதாரண ஓநாய்கள் தான் என்றும், 6 ஓநாய்கள் சேர்ந்து கூட்டமாக வேட்டையாடுவதாகவும், முதலில் தகவல் பரவியது. வனத்துறையினரும் அவை ஓநாய் தான் என்று கூறினர்.
வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு, நான்கு ஓநாய்களை பிடித்தனர். ஆனாலும் தாக்குதல் நின்றபாடில்லை. இன்னும் இரண்டு ஓநாய்கள், வனத்துறைக்கு ஆட்டம் காட்டி வருகின்றன. அவற்றைப்பிடிக்க தீவிர தேடுதல் முயற்சி எடுத்து வருகின்றனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “ஓநாய்கள்தான் கூட்டமாக வந்து, கிராமங்களுக்குள் புகுந்து மனிதர்களை தாக்கியுள்ளன. குறிப்பாக, சிறு குழந்தைகள் அவற்றின் இலக்காக இருந்துள்ளன. மீதமுள்ள 2 ஓநாய்களையும் பிடிப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது. இரண்டு ஓநாய்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது இன்று அல்லது நாளைக்குள் அவை பிடிக்கப்பட்டு விடும். ஓநாய்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க இரவு நேரங்களில் பட்டாசு வெடிக்கப்படுகிறது. அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.
அதேசமயம், இங்கு மனித வேட்டையாடும் விலங்குகள் உண்மையிலேயே ஓநாய்கள் தானா, சிறுத்தை போன்ற வேறு ஏதேனும் பெரிய விலங்கா என தெரியாமல் மாவட்ட மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
எனினும் வனத்துறையினர் அவை ஓநாய்கள் தான் என உறுதியாக கூறி வருகின்றனர். மீதமுள்ள இரண்டு ஓநாய்களும் பிடிபட்டால் தான் உண்மை என்ன என்பது தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago