2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மனநலம் பாதித்த பெண் வன்புணர்வு

Freelancer   / 2024 ஓகஸ்ட் 19 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பட்டுக்கோட்டை அருகே மனநலம் பாதித்த பெண்மீது பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை செக்கடி கொள்ளை பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகள் அம்பிகா (31). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்.

அம்பிகாவின் பெற்றோர் கடந்த 7ஆம் திகதி இரவு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்ததையடுத்து, சுமார் 9 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (49) என்பவர் வீட்டுக்குள் புகுந்து தனியாக இருந்த அம்பிகாவை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் வேதனையில் துடித்த அவர் நேற்றுக் காலை பெற்றோரிடம் தனக்கு நடந்ததை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, வாட்டாத்திக்கோட்டை பொலீஸாரிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. அத்துடன்  பெற்றோர் அம்பிகாவை  பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொலிஸார் குற்றவாளியை தேடி வந்த நிலையில், சேதுபாவாசத்திரம் அருகே சுப்பிரமணியை மடக்கி பிடித்தனர். மேலும் இது தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .