2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

மதுக்கடையில் பணம் கேட்டதால் மொத்த ஊரும் இருளில்

Freelancer   / 2024 செப்டெம்பர் 25 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுக்கடையில் பணம் கேட்டதால் கொந்தளித்த மின் ஊழியர்கள், மொத்த ஊருக்கும் மின் தடை ஏற்படுத்திய சம்பவத்தில், மின் வாரியம் குறித்த 3 பேரையும் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.

கேரள மின்வாரிய ஊழியர்கள் 3 பேர், மதுபான கடையொன்றில், மது அருந்திவிட்டு பணம் தர மறுத்துள்ளனர்.

இது வாக்குவாதமாக மாறிய நிலையில், பழிவாங்கும் எண்ணத்தில், மின்வாரிய ஊழியர்கள் 11 கே.வி., மின் பீடரில் தடை ஏற்படுத்தியுள்ளனர்.

இதனால் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. விசாரித்தபோது தான், ஊழியர்கள் போதையில் இருப்பதும், காரணமே இல்லாமல் மின் தடை ஏற்படுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து பதவியை துஷ்பிரயோகம் செய்யும் வகையில், மின்வாரிய ஊழியர்கள் 3 பேர் செய்த சம்பவம் மின்சார வாரியம் தலைமை அலுவலக அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது. மதுக்கடை ஊழியர்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மின்வாரிய ஊழியர்கள் 3 பேர் மின்தடையை ஏற்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தலைமை அதிகாரியின் உத்தரவின் பேரில், குறித்த மின்வாரிய ஊழியர்கள் 3 பேரையும் நிர்வாக இயக்குநர் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதாக கேரள மாநில மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .