2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

மணிப்பூரில் தொடரும் பதற்றம்: மத்திய அரசின் அதிரடி தீர்மானம்

Freelancer   / 2024 நவம்பர் 19 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல்  நீடிப்பதால், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட கூடுதல் படைகளை அனுப்புவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில், திங்கட்கிழமை (18) அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இதன்போதே, வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு கூடுதல் படையினரை  அனுப்பவும், அங்கு விரைவில் முழு அமைதியை ஏற்படுத்த கவனம் செலுத்து மாறும் அமித் ஷா அறிவுறுத்தினார். 

இதற்கமைய, மணிப்பூர் மக்களை வன்முறையில் இருந்து பாதுகாத்து, அமைதியை நிலை நாட்டும் வகையில் கூடுதலாக 5,000 வீரர்கள் அடங்கிய துணைஇராணுவப்படையை அனுப்புவதற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X