Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 22 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தர பிரதேச மாநிலம் - பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா 8 இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான என்எல்பி சர்வீசஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பிரயாக்ராஜில் 45 நாட்கள் நடைபெறும் மகா கும்பமேளா 1.2 மில்லியன் அதாவது 12 இலட்சம் தற்காலிக வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 8 இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைவார்கள். இந்த தற்காலிக வேலைவாய்ப்புகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான உந்துசக்தியாக மாறியுள்ளது.
“மேலும், இந்த கும்பமேளா பிரயாக்ராஜின் வணிகத்தை ஊக்குவிப்பது மட்டுமின்றி அண்டைய பிராந்தியங்களிலும் குறிப்பிடத்தக்க வகையில் வர்த்தகத்தை ஊக்குவிக்கும். குறிப்பாக, சுற்றுலா, போக்குவரத்து, லாஜிஸ்டிக், சுகாதாரம், ஐடி, சில்லறை வர்த்தகம் ஆகிய துறைகள் கணிசமான பலன்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் உலகின் மிகப்பெரும் மதத் திருவிழாவான மகா கும்பமேளாவில், 40 கோடி பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பது உத்த பிரதேச அரசின் மதிப்பீடாகவுள்ளது.
மகா கும்பமேளாவால் ரூ.2 இலட்சம் கோடி அளவுக்கு கூடுதலாக பொருளாதார நடவடிக்கைகள் உத்தவேகம் அடையும் என்று, அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) தெரிவித்துள்ளது.
திரிவேணி சங்கமத்தில் இதுவரை 7.72 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக, புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago