2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மகா கும்பமேளா; மோடியின் வாழ்த்து

Freelancer   / 2025 ஜனவரி 13 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகா கும்பமேளா, இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியத்தை உள்ளடக்கியது என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் இன்று (13) கோலாகலமாக தொடங்குகிறது. 

இதையொட்டி, அங்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். இந்த விழாவில் கலந்து கொண்டு புனித நீராட உலகில் பல இடங்களில் இருந்தும் பிரயாக்ராஜ் நகருக்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில், மகா கும்பமேளாவையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,

"பாரதத்தின் பெருமை மற்றும் கலாச்சாரத்தை போற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளான மகா கும்பமேளா பிரயாக்ராஜில் தொடங்கியுள்ளது. இது நம்பிக்கை, பக்தி மற்றும் கலாசாரத்தின் புனித சங்கமத்தில் எண்ணற்ற மக்களை ஒன்றிணைக்கிறது.

“மகா கும்பமேளா இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியத்தை உள்ளடக்கியது. நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டாடுகிறது. பிரயாக்ராஜ் கோலாகலமாக இருப்பதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். எண்ணற்ற மக்கள் அங்கு வந்து புனித நீராடி ஆசி பெறுகிறார்கள். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வாழ்த்துகள்”என குறிப்பிட்டுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X