2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் விவகாரத்தால் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

Freelancer   / 2025 பெப்ரவரி 03 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் தொடர்பாக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

பாராளுமன்ற வரவு-செலவுத் திட்ட கூட்டத்தொடர் கடந்த 31ஆம் திகதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில் 2025-2026ஆம் நிதியாண்டுக்கான மத்திய வரவு-செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில், சனிக்கிழமை (1)  தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இன்று (3) காலை 11 மணியளவில் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கின. அப்போது உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் கோரிக்கை வைத்தன.

 ஆனால் இதற்கான அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

இதையடுத்து, மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X