Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 08 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய ரூ.1,000 கோடி (இந்திய பெறுமதி) மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித் துறை விடுவித்துள்ளது.
2019 நவம்பர் முதல் 2022 ஜூன் வரை மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி நடத்தியது. அப்போது தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராக பதவி வகித்தார்.
கடந்த 2021 ஒக்டோபரில் அஜித் பவார், அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினருக்கு சொந்தமான ஆலைகள், இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது பினாமி சொத்து பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பான வழக்கு மும்பையில் உள்ள தீர்ப்பாயத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், "ஆலைகள், சொத்துகள் தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கி நடைமுறைகள் மூலமே நடைபெற்றுள்ளன. பினாமி முறையில் பண பரிவர்த்தனை நடைபெறவில்லை. எனவே ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துகளை விடுவிக்க வேண்டும்" என்று உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து கடந்த நவம்பர் 5ஆம் திகதியன்று, வருமான வரித் துறை சார்பில் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித் துறை விடுவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
26 Dec 2024