Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஞ்சாபில் போலி நாணயத்தாள்களை அச்சடித்து புழக்கத்தில் விட முயன்ற இரு வாலிபர்களை பொலிஸார் கைது செய்தனர்.
பெரோஸ்பூர் உள்ள ஜைரா டவுன் பகுதியைச் சேர்ந்த 22 வயது வாலிபர் ஜஸ்கரன் சிங். இவர், தனது வீட்டில் போலி நாணயத்தாள்களை அச்சிட்டு வருவதாக பொலீஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில், விரைந்து சென்று சோதனை நடத்திய போது, அங்கு போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டன.
கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ரூ.100, ரூ.200, ரூ.500 என ரூ.3.24 இலட்சம் மதிப்பிலான போலி நாணயத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு புறம் மட்டும் ரூபாய் நோட்டு அச்சிடப்பட்ட தாள்கள் இருந்தன. ரூபாய் நோட்டு அச்சிட்டு கட்டிங் செய்யப்படாத ஏ4 தாள்களும் ஏராளம் இருந்தன. பிரின்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. பொலிஸார் வருவதை கண்டதும், ஜஸ்கரன் சிங் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், அவரை பொலிஸாரும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஆக.,2ஆம் திகதி ஜஸ்கரன் சிங்கை கைது செய்ததோடு, இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஆகாஷ்தீப் என்ற நபரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “போலி நாணயத்தாள்களை அச்சடித்து புழக்கத்தில் விட முயற்சித்த போது சிக்கிக் கொண்டனர். பின்னர், பழக்கடை போன்ற சிறுசிறு கடைகளில் அவற்றை மாற்றியுள்ளனர். சூதாடும் இடத்தில் நோட்டுக்களை கொடுத்துள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் இதை கண்டுபிடித்து தகராறு செய்துள்ளனர். இதில் தான் விவகாரம், பொலிஸூக்கு வந்து விட்டது.
போலி நாணயத்தாள்களை அச்சடிப்பதற்காக, அஜித் என்பவரை பயன்படுத்தி, பிரிண்ட்டிங் மெஷின், தரமுள்ள ஏ4 பேப்பர் உள்ளிட்டவற்றை வாங்கி வரச் செய்துள்ளனர். தற்போது, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்றனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .