Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆம்ஸ்ட்ரோங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி மொட்டை கிருஷ்ணனுக்கும் இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷாவிற்கும் வங்கி பண பரிவர்த்தனைகள் இருந்ததாக செய்திகள் வெளியான நிலையில், மோனிஷா சார்பில் அவரது வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்து பொது நோட்டீஸ் வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ரோங் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இக்கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் என்பவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் மொட்டை கிருஷ்ணனுடன் பேசியதாக திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் பொலிஸார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகிய நிலையில், அவர்கள் இருவருக்குமிடையில், வங்கி பண பரிவர்த்தனைகள் இருந்ததாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இது அடிப்படை ஆதாரமற்ற தவறான செய்தி என்று அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்தச் செய்தியை திருத்த வேண்டும் என்றும், இல்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோல் வங்கி பண பரிவர்த்தனைகள் தொடர்பான செய்திகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சில விளக்கங்கள் மட்டுமே வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் குறித்து மோனிஷாவிடம் கேட்டிருந்ததாகவும், அனைத்து விசாரணையும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி நடந்து முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோனிஷா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
2 hours ago
3 hours ago