Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 03 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜார்க்கண்ட்டில் பொலிஸ் பணிக்கான உடற்தகுதித் பரீட்சையின் போது, 11 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொலிஸ் பிரிவில் சுமார் 600 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான உடற்தகுதித் தேர்வு கடந்த மாதம் 22ஆம் திகதி 7 மையங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் உடற்தகுதித் தேர்வில் கலந்துகொண்டவர்கள் பலர் திடீரென மயங்கி விழுந்தனர். அதில், ஜார்க்கண்ட்டின் பலமுவில் உள்ள மையத்தில் 4 பேர், கிரிதியில் 2 பேர், ஹஸாரிபாக்கில் 2 பேர், ராஞ்சி, மொசபானி, சாஹேப்கஞ்ச் பகுதியில் ஒருவர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர்.
அவர்கள் கடும் வெயிலில் அதிக நேரம் பயிற்சியில் ஈடுபட்டதால் உயிரிழந்தாக தெரிகிறது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் ஸ்டீரொய்ட் உள்ளிட்ட மருந்துகளை எடுத்துக்கொண்டு பயிற்சியில் ஈடுபட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இளைஞர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்தார். இச்சம்பவம் மிகுந்த மன வேதனையை அளிப்பதாக தெரிவித்த அவர், கான்ஸ்டபில் பணிக்கான தேர்வை 3 நாட்களுக்கு ஒத்திவைக்கவும் உத்தரவிட்டார்.
மேலும், காலை 9 மணிக்கு பிறகு உடற்தகுதித் தேர்வை நடத்தக்கூடாது எனவும் ஹேமந்த் சோரன் அறிவுறுத்தியுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்ததை இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago