Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரபிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தததாக நாடகமாடிய சிறுமியின் மீது பொலிஸார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம், ஜான்சியில் சிறுமி ஒருவரை காரில் கடத்திச் சென்று இரண்டு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பொலிஸில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
நாட்டில் ஆங்காங்கே, கற்பழிப்பு சம்பவங்களும், ஆவேச போராட்டங்களும் நடந்து வரும் நிலையில், இந்த புகார் வந்தவுடன் பொலிஸார் அதிர்ந்து விட்டனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள, உடனடியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆனால், சம்பந்தப்பட்ட சிறுமியிடம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சிறுமியை யாரும் கடத்தவும் இல்லை; கற்பழிக்கவும் இல்லை, காதலனை கரம் பிடிப்பதற்காக, சிறுமி போட்ட நாடகம் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதுபற்றி பொலிஸ் ஒருவர் கூறுகையில், “வெள்ளை நிற காரில் இரண்டு பேர் தன்னை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி புகார் கொடுத்திருந்தார். குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் எடுத்து விசாரித்தோம். அதில், பல்வேறு தகவல்கள் பொய்யானவை என தெரிய வந்துள்ளது.
சிறுமியின் குடியிருப்பு அருகே உள்ள சி.சி.டி.வி., கெமராக்களை ஆய்வு செய்த போது, வெள்ளை நிறத்தில் கார் ஏதும் அப்பகுதியில் செல்லவில்லை. அவர் தனியாக சுற்றித் திரிந்துள்ளார். அவர் தனது காதலனை திருமணம் செய்வதற்காகவே இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இதற்கு அவரது அத்தையும், அவரது மகனும் உடந்தையாக இருந்துள்ளனர். காதலனின் வருகைக்காக கோட்டை பகுதிக்கு, நகை உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் சென்றுள்ளார். ஆனால், காதலன் வராததால் மீண்டும் அத்தையின் வீட்டுக்கு சென்றுள்ளார். சிறுமி அளித்த புகார் பொய் என தெரிய வந்துள்ளதால், போக்சோ வழக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், “பொய்யான புகார் கொடுத்து பொலிஸாரை அலைக்கழிக்க வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற கடுமையான குற்றங்கள், நடக்காமலேயே நடந்ததாக புகார் அளிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என்று அவர் தெரிவித்தார்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
57 minute ago
3 hours ago