Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 26 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெங்களூரில் பெண்ணை கொன்று துண்டுதுண்டாக்கி குளிர்சாதனப்பெட்டியில் வைத்த கொலையாளி ஒடிசாவில் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூர், வையாலி காவலில், வீரண்ணா பவன் அருகில் பூட்டியே கிடந்த வீட்டிலிருந்து சில நாட்களாக துர்நாற்றம் வீசியது. தகவலறிந்த பொலிஸார் கடந்த 22ஆம் திகதியன்று பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தியதில், வீட்டில் குளிர்சாதனப்பெட்டி உள்ளே துண்டு, துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் இருந்தது. அது, 29 வயதான மஹாலட்சுமி என்பதும் தெரிய வந்தது.
பொலிஸார் நடத்திய விசாரணையில் கொலையான பெண் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், அவர் கணவரிடம் இருந்து பிரிந்து, கடந்த ஆறு மாதங்களாக தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், பொலிஸார் வழக்குப்பதிவு செய்து முக்தி ரஞ்சன் ராய் என்பன் தான் கொலையாளி என கண்டறிந்து, அவனை தேடிவந்த நிலையில் ஒடிசாவில் பஹாத்ராக் மாவட்டத்தில் கொலையாளி சடலமாக மீட்கப்பட்டான். அவன் தற்கொலை செய்து கொண்டதாக ஒடிசா பொலிஸார் தெரிவித்தனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
21 Dec 2024