Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 13 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருவள்ளூர் காய்கறி சந்தையொன்றில் பெண் ஒருவர் மீது மற்றொரு பெண், பெட்ரோல் ஊற்றி எரித்த காட்சி இணையத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி மேலும் தெரியவருகையில், திருவள்ளுரைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு பார்வதி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சுரே ஷூக்கு ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தம்பதியினர் இருவருக்குமிடையில், அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சுரேஷின் காய்கறி கடையை ராஜேஸ்வரி கவனித்து வந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத அவரின் மனைவி பார்வதி கடந்த 9ஆம் திகதி காலை 8.50 மணியளவில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள திருவள்ளூர் சந்தைப் பகுதிக்கு வந்து காய்கறி கடையில் இருந்த ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
அதில் சுரேஷின் மனைவி பார்வதி ராஜேஸ்வரி இருக்கும் காய்கறி கடைக்கு வேகமாக வருவதும் போத்தலில் தான் கொண்டு வந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றுவதும், பின்னர் அவரின் உடல் முழுவதும் தீ பற்றி எரியும் காட்சிகள் பதிவாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும், உடல் முழுவதும் 80 சதவீத தீக்காயங்களுடன் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக சுரேஷ், சுரேஷின் மனைவி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .