2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

பெண்களே இயக்கிய ’வந்தே பாரத்’ ரயில்

Freelancer   / 2025 மார்ச் 09 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, மகாராஷ்டிராவில், பெண்களே வந்தே பாரத் ரயிலை இயக்கினர். 

சர்வதேச பெண்கள் தினம்,சனிக்கிழமை (8) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினலில் இருந்து ஷீரடி செல்லும் வந்தே பாரத் விரைவு ரயிலை (22223) முழுக்க முழுக்க பெண்களே, சனிக்கிழமை (8) இயக்கினர். இதற்கு மத்திய ரயில்வே அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

இந்த ரயிலை இயக்கிய ஓட்டுநர், துணை ஓட்டுநர். உதவியாளர், ரயில் மேலாளர், டிக்கெட் பரிசோதகர் ரயில் பணியாளர்கள் என அனைவரும் பெண்களே இதில் இடம்பெற்றனர் என்று, மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்வப்னில் நிலா தெரிவித்தார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .